கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறை: பயணிகள் வசதிக்காக தமிழகம் முழுவதும் 4,260 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தடையின்றி பயணம் செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக மொத்தம் 4…

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தடையின்றி பயணம் செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக மொத்தம் 4,260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
குறிப்பாக, கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறையை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு திரும்புவார்கள் என்பதால், பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு இடங்களிலிருந்து கூடுதலாக 805 சிறப்பு பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பயணங்களின் போது ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் சிரமமின்றி பயணம் செய்வதை உறுதி செய்யவும் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் உரிய முறையில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.