உடலைச் சொறிந்துவிடும் விசித்திரமான தொழில்: மாதம் ரூ.14 லட்சம் சம்பாதிக்கும் சீன இளைஞர்
சீனாவின் ஷென்சென் நகரைச் சேர்ந்த 32 வயதான ஜாங் சியாவோகியாவோ என்ற இளைஞர், உடலில் அரிப்பு எடுக்கும் இடங்களில் சொறிந்து விடுவதை தனது முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளார். இந்த விசித்திரமான சேவை மூலம் அவர் ம…
சீனாவின் ஷென்சென் நகரைச் சேர்ந்த 32 வயதான ஜாங் சியாவோகியாவோ என்ற இளைஞர், உடலில் அரிப்பு எடுக்கும் இடங்களில் சொறிந்து விடுவதை தனது முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளார். இந்த விசித்திரமான சேவை மூலம் அவர் மாதம் 14 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
ஒரு சாதாரண காணொளியைப் பார்த்தபோது தோன்றிய யோசனையைத் தொடர்ந்தே அவர் இந்தத் தனித்துவமான தொழிலைத் தொடங்கியுள்ளார். இந்த வினோதமான சேவை குறித்து அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்த தகவல்கள் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.
உலகளவில் பல்வேறு புதுமையான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாகி வரும் சூழலில், இந்த இளைஞரின் விசித்திரமான தொழில் பலரது கவனத்தையும் ஈர்த்து உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.